இந்தியாவில் மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

0
இந்தியாவில் மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!
இந்தியாவில் மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!
இந்தியாவில் மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

இந்தியாவில் மீண்டும் ரூபாய் 1000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுமா என்பது பற்றி ரிசர்வ் வங்கி தற்போது விளக்கியுள்ளது.

ரூ.1000 நோட்டுகள்:

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 2000 ரூபாய்நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் மத்தியில் 2000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் நேற்று மீண்டும் 2000 ரூபாயை திரும்ப பெற இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும், இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வரும் மே 23ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாற்றுவதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் மத்தியில் ரூபாய் 2000 நோட்டுகள் அதிகளவில் இல்லை என்றாலும், வணிகர்களின் மத்தியில் பரவலாக 2000 நோட்டுகள் தென்படுகிறது.

SSB Head Constable அறிவிப்பு 2023 – 914 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.81100/-

இதனால் இந்த நான்கு மாத கால அவகாசம் கண்டிப்பாக போதுமானதாக இருக்காது எனவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரைக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தியாவில் ரூபாய் 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுமா என கேள்வி எழுந்த நிலையில், ரூபாய் ஆயிரம் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கியின் வட்டாரத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மதுபான கடைகளில் ரூபாய் 2000 நோட்டுகள் செல்லாது எனவும் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 2000 நோட்டுகளை வாங்கக்கூடாது என எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!