
2025 ஜனவரி 1 தேதி முதல் சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள் மாற்றம்..!! “மாதத்திற்கு வெறும் ரூ. 1000 முதலீடு செய்தலே போதும்…லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்”..!
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்காக பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், போஸ்ட் ஆபிஸ் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை வழங்குவதோடு நிதி பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மேலும், பெரும்பாலான அரசாங்கத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 4 வருடங்களாக மாறாமல் இருந்த பொது வருங்கால வைப்பு நிதி(PPF), தேசிய சேமிப்பு சான்றிதழ்(NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா முதலிய சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை கடந்த 2024 ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று மத்திய நிதி அமைச்சகம் திருத்தம் செய்தது.
அதன்படி, அரசாங்கம் மூலம் அதிக லாபத்தை வழங்கும் போஸ்ட் ஆபிஸ் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்கள் பற்றி கீழே விரிவாக காண்போம்.
1. தேசிய மாதாந்திர சேமிப்பு திட்டம்: இதில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 தொடங்கி அதிகபட்சமாக ஒரு கணக்கிற்கு ரூ. 9 லட்சம் மற்றும் கூட்டு கணக்கிற்கு ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2025 வரை இதற்கு வட்டி விகிதம் 7.4% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: இதில் 55 வயதிற்கு மேற்பட்டவர் கணக்கை தொடங்கலாம். இதில் குறைந்தபட்சம் ரூ. 1000 தொடங்கி அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை சேமிக்கலாம். இதன் முதிர்வு காலம் நிறைவடையும் போது மேலும் 3 ஆண்டுகள் வேண்டுமென்றால் நீடித்துக் கொள்ளலாம் . இதுமட்டுமின்றி, 80 சி சட்டப்பிரிவின் கீழ் வரி விலக்கு கோரலாம். இதற்கு ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2025 வரை வட்டி விகிதம் 8.20% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3.தேசிய சேமிப்பு சான்றிதழ்: இதில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதனை முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் வயது வந்தவர் அல்லது மைனர் என இருவரும் கணக்கை திறக்கலாம். இதற்கு ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2025 வரை வட்டி விகிதம் 7.7% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

























