BGT 2024-25: ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்த இறுதி போட்டி.. முதல் இன்னிங்சிலேயே துவன்றது இந்திய அணி..

0
BGT 2024-25: ????????????????? ??????? ?????? ????? ??????.. ????? ????????????? ???????? ?????? ???..
BGT 2024-25: ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்த இறுதி போட்டி.. முதல் இன்னிங்சிலேயே துவன்றது இந்திய அணி..

BGT 2024-25: ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்த இறுதி போட்டி.. முதல் இன்னிங்சிலேயே துவன்றது இந்திய அணி..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (03-01-2025) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். மேலும், “ரோஹித் மற்றும் ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக ஷுப்மான் கில் மற்றும் பிரசித் கிருஷ்ணா” ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து, விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40, ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரிட் பும்ரா 22 மற்றும் ஷுப்மான் கில் 20 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!