
“புதிதாக வரவிருக்கும் 5000 ரூபாய் நோட்டுகள்…!! ரிசர்வ் வங்கி அறிவித்த திடீர் அறிவிப்பு”…!! என்னனு படிச்சு தெரிஞ்சுக்கோங்க மக்களே..
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரத்துக்கு பிறகு 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்த நோட்டுகளை 1978 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பெரிய மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் பெரிய மதிப்புடைய நோட்டு என்றால் 500 ரூபாய் தான்.
இந்த நிலையில் இந்தியாவில் புதிதாக பச்சை நிறமுடைய 5000 ரூபாய் நோட்டுகள் வர இருப்பதாக தகவல் வெளியாகின. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில், “புதிதாக 5000 ரூபாய் வர இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் மேலும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்”. தற்போது இந்தியாவில் ரூ 500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10 புழக்கத்தில் உள்ள நோட்டுகளுக்கு மாற்றாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடுவது சரியல்ல என ஆர்.பி.ஐ கருதுகிறது. மேலும் ‘புதிய கரன்சி நோட்டுகள் வெளியிடும் அதிகார பூர்வமான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் மட்டுமே அறிவிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்றும் ஆர்.பி.இ தெரிவித்துள்ளது.

























