
பான் கார்டு இல்லாமல் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் சரிபார்க்கலாம்..!! ” அதுவும் இலவசமாக ..அது எப்படினு உங்களுக்கு தெரியுமா”..?
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டுகளின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் வசதிகளை பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் மதிப்பு அவசியமானதாக உள்ளது. பெரும்பாலும் சிபில் ஸ்கோர் அதிகம் உள்ளவர்களுக்கு அதிக தொகையுடன் கடன் வழங்குவதற்கு பல்வேறு வங்கிகள் முன் வருகின்றன. மேலும், இந்த கிரெடிட் ஸ்கோர்களை தீர்மானிப்பதற்கு முக்கிய காரணியாக “சிபில்” திகழ்கிறது. இந்த சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணை பயன்படுத்தி கிரெடிட் மதிப்பெண் நிலவரத்தை வெளியிடுகிறது. இந்த மதிப்பெண் மூலம் தான், நாம் பெறும் வங்கி கடன் தொகை மற்றும் விதிமுறைகள் மாறுபடுகிறது. இவ்வாறு கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பதற்கு பான் கார்டு அவசியமானதாக உள்ளது. ஆனால், பான் கார்டு இல்லாமல் ஆன்லைனில் இலவசமாக கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கலாம். அது எப்படி என்பதை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
விண்ணப்பிக்கும் முறை:
1. அதிகாரப்பூர்வ சிபில் இணையதளத்திற்கு சென்று Personal Cibil Score என்பாய் கிளிக் செய்யவும். பின்னர், Get Your Free Cibil Score என்பதை கிளிக் செய்யவும்.
2. ஒருவேளை நீங்கள் சிபில் ஸ்கோரில் கணக்கு தொடங்கவில்லை என்றால், மாற்று ஆவணங்களான பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கு தொடங்கலாம்.
3. கணக்கு தொடங்கிய பின், தனிப்பட்ட விவரங்களான மொபைல் நம்பர், பிறந்த தேதி, மாநிலம் முதலியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதற்கு பின்னர், உங்கள் மொபைலுக்கு OTP வரும் அதை சமர்ப்பித்து Submit என்பதை கிளிக் செய்தால், உங்கள் கணக்கு தொடங்கப்படும். இதில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சிபில் ஸ்கோரை சரிபார்த்து கொள்ளலாம்.

























