
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Field Worker காலிப்பணியிடங்கள் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field / Lab Worker பணிக்கான காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
ICAR -IARI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Field / Lab Worker பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAR -IARI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAR -IARI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.01.2025ம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.























