
மக்களே தயாரா..?? “பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்…!!” எங்க , எப்போன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!
வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மேலும், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக 2.20 கோடி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும் , இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் இன்று காலையில் இருந்து இந்த பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் இந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பரிசு தொகுப்பு வாங்கும் வகையில் மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates























