
மதுரை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. விமான நிலையத்தில் ஏற்படவிருக்கும் புதிய மாற்றம்.. வெளியான முக்கிய தகவல்..!!
சர்வதேச எல்லைகளை இணைக்கும் போக்குவரத்து முறைகளில் விமானப் போக்குவரத்தும் ஒன்றாகும். இந்த விமானப் போக்குவரத்து சர்வதேச வணிகம், வர்த்தகம், மருத்துவம் மற்றும் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் மக்களின் பயணத்தை எளிதாக்குகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இரவு நேரங்களிலும் சென்னைக்கு விமானம் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது “மதுரை – அபுதாபி இடையே ஜூன் 13 முதல் நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையானது இந்திய நேரப்படி மதுரையிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, அபுதாபி நேரப்படி மாலை 5.20 மணிக்கு அங்கு சென்றடையும் என்றும், மறுபுறம் அபுதாபி நேரப்படி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணிக்கு மதுரை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் இயக்கப்படும் இந்த சேவையானது பயணிகளின் ஆதரவை பொறுத்து கூடுதல் நாட்களுக்கு நீட்டிக்கப்படும்” என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.


























வொர்த்தான முடிவு நன்றி இன்டிகோ