வான்வெளி பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா.. டிரோன் எதிர்ப்பு ராக்கெட் சோதனை வெற்றி என தகவல்..!!

0
???????? ?????????? ???????????? ???????.. ?????? ????????? ???????? ????? ?????? ?? ?????..!!
வான்வெளி பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா.. டிரோன் எதிர்ப்பு ராக்கெட் சோதனை வெற்றி என தகவல்..!!

வான்வெளி பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா.. டிரோன் எதிர்ப்பு ராக்கெட் சோதனை வெற்றி என தகவல்..!!

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இயங்கும் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த போர் பதற்றத்தில் இந்தியா மீது ஏவப்பட்ட ட்ரோன்களை காலி செய்ததில் நமது வான் பாதுகாப்பு அமைப்பிற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் புதிய உள்நாட்டு ட்ரோன் தடுப்பு சோதனை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ஆன ”பார்கவஸ்த்ரா” ஒடிசாவின் கோபால்பூரில் நேற்று (13-05-2025) பரிசோதிக்கப்பட்டது. மேலும், மூத்த ராணுவ வான் பாதுகாப்பு (AAD) அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏவப்பட்ட அனைத்து ராக்கெட்டுகள் மற்றும் டிரோன்களையும் வெற்றிகரமாக அழித்து வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!