தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (16-05-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!
மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசானது பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது.
வான்வெளி பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா.. டிரோன் எதிர்ப்பு ராக்கெட் சோதனை வெற்றி என தகவல்..!!
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் பெருகவளந்தான் பகுதியிலும், அரியலூர் மாவட்டம் முழுவதுமாக நாளை (16-05-2025) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























