
ஓய்வூதியதாரர்களின் வயதுக்கு ஏற்ப பென்சன் வழங்கும் மத்திய அரசு.. ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அறிவித்த முக்கிய தகவல்..!!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு நலத்திட்டமாகும். இந்த தொகையானது ஊழியர்கள் பணிபுரியும் போது சேர்த்து வைக்கப்பட்டு ஓய்விற்கு பிறகு அவர்களுக்கு முறையாக வழங்கப்படும். இந்நிலையில் மாதாந்திர பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை பெறாத பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!! பெண்களே இத மிஸ் பண்ணிராதீங்க…!!
அதாவது, மத்திய அரசு 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய சலுகை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, “கருணை உதவித்தொகை என்ற பெயரில் கூடுதல் ஓய்வூதியம் ஆனது ஒரு ஓய்வூதியதாரர் பரிந்துரைக்கப்பட்ட வயதை அடையும் போது வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஓய்வூதியம் ஆனது அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் “80 முதல் 100 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 % – 100% வரை கூடுதலாக ஓய்வூதியம் பெறுவார்கள்” என ஓய்வூதியதாரர்கள் நலத்துறை தெரிவித்துள்ளது.
Join the ExamsDaily Whatsapp Group

























