மகளிர் உரிமை தொகை பெறாத பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!! பெண்களே இத மிஸ் பண்ணிராதீங்க…!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள பெண்களுக்காக இதுவரை 3 முறை முகாம்கள் நடத்தப்பட்டு இதன் மூலம், இதுவரை 1 கோடியே 14 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டு, பயன்பெற்று வருகின்றனர். இருப்பினும் இதில் பல தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
பொது டிக்கெட்டுகள் மூலம் பயணம் செய்பவரா நீங்கள்..?? அப்போ தவறுதலாக கூட இதை செய்யாதீங்க.. இந்தியன் ரயில்வே விதித்த புதிய விதி..!!
இந்த பிரச்சனையை தீர்க்கும் விதமாக , வரும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ள “மக்களுடன் முதல்வர்” நிகழ்ச்சியில் விடுப்பட்ட பெண்கள் விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக, தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 9,000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பங்கேற்க உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, மகளிர் உரிமை தொகை பெறாத பெண்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


























