சாமானிய மக்களுக்கு ஒரு குட் நியூஸ்…!! தமிழகத்தில் சிலிண்டர் விலை திடீர் குறைவு…!!

0
??????? ?????????? ??? ???? ??????...!! ??????????? ????????? ???? ?????? ??????...!!
சாமானிய மக்களுக்கு ஒரு குட் நியூஸ்...!! தமிழகத்தில் சிலிண்டர் விலை திடீர் குறைவு...!!

சாமானிய மக்களுக்கு ஒரு குட் நியூஸ்…!! தமிழகத்தில் சிலிண்டர் விலை திடீர் குறைவு…!!

 

இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, உள்நாட்டில் மாதத்தின் முதல் நாள் அன்று அதன் விலையானது மாற்றம் செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில், ஏப்ரல் முதல் நாளான இன்று சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

“இந்தியாவிற்கு கண்டிப்பாக செல்வேன்”..!! உறுதி அளித்த சுனிதா வில்லியம்ஸ்..!! 

அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலையானது ரூ. 43.50 குறைந்து ரூ. 1,921.50 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி, ரூ. 818.50 க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி அன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது  ரூ. 5.50 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!