IPL 2025 MI vs KKR: போட்டியில் நிலை தடுமாறிய கொல்கத்தா.. தொடர் வெற்றியை குவிக்கும் மும்பை அணி.. அஸ்வனி குமார் நிகழ்த்திய புதிய சாதனை..

0
 IPL 2025 MI vs KKR: ?????????? ???? ???????? ?????????.. ????? ???????? ?????????? ?????? ???.. ?????? ?????? ?????????? ????? ?????..
 IPL 2025 MI vs KKR: போட்டியில் நிலை தடுமாறிய கொல்கத்தா.. தொடர் வெற்றியை குவிக்கும் மும்பை அணி.. அஸ்வனி குமார் நிகழ்த்திய புதிய சாதனை..

 IPL 2025 MI vs KKR: போட்டியில் நிலை தடுமாறிய கொல்கத்தா.. தொடர் வெற்றியை குவிக்கும் மும்பை அணி.. அஸ்வனி குமார் நிகழ்த்திய புதிய சாதனை..

 

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று (31-03-2025) நடைபெற்ற IPL லீக் போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தது. அதன்படி “முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவரில் 116 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது”.

“இந்தியாவிற்கு கண்டிப்பாக செல்வேன்”..!! உறுதி அளித்த சுனிதா வில்லியம்ஸ்..!! 

இப்போட்டியில் “கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்யா ரஹானே (11), வெங்கடேஷ் ஐயர் (3), ரகுவன்ஷி (26), ரிங்கு சிங் (17), மணிஷ் பாண்டே (19), ஆண்ட்ரே ரசல் (5) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்”. மேலும், “மும்பை அணியின் சார்பில் விளையாடிய ரோகித் சர்மா (13) ஆட்டமிழந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் (27) மற்றும் ரியான் ரிக்கல்டன் (62) ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இதை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் தரப்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டும், போல்ட், சாண்ட்னர், விக்னேஷ் புத்தூர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மேலும், தனது முதல் போட்டியில் விளையாடிய அஸ்வனி குமார் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்”. மேலும், “இப்போட்டியை வென்றதன் மூலம் IPL தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 24 முறை வெற்றி பெற்ற சாதனையை மும்பை அணி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!