“இந்தியாவிற்கு கண்டிப்பாக செல்வேன்”..!! உறுதி அளித்த சுனிதா வில்லியம்ஸ்..!!
அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி 8 நாள் ஆய்வு பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் புட்ச் வில்மோருடன் விண்வெளியில் 9 மாதங்கள் தங்கியிருக்க வேண்டியதாயிற்று. பின்னர் அமெரிக்காவின் NASA மற்றும் Space X நிறுவனத்தின் மீட்பு முயற்சியால் மார்ச் 19ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, இன்று (01-04-2025) செய்தியாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ் கூறியது “விண்வெளியில் இருந்த போது நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன் என்றும், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு படுக்கையில் படுத்துறங்கியது மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்”. இதை தொடர்ந்து, “விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா அற்புதமாக இருந்ததாக கூறிய அவர், இந்தியாவில் தனது தந்தையின் சொந்த ஊரான குஜராத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்திற்கு நிச்சயமாகச் செல்வேன் என நம்பிக்கை தெரிவித்தார்”.
























