5வது டி20 போட்டி – 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

0
5வது டி20 போட்டி - 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
5வது டி20 போட்டி - 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
5வது டி20 போட்டி – 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

நேற்று நடைபெற்ற 5வது டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

5வது டி20 போட்டி:

இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியது. இதன் பின்னர், 20 ரன்கள் வித்தியாசத்தில் 4வது T20 போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது. இதன் பின்னர், நேற்று 5வது T20 போட்டி பெங்களூரில் நடைபெற்றது.

இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதனால், முதலில் களமிறங்கிய இந்திய அணியினர் 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பில் 160 ரன்களை குவித்தனர். இதன் பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியினர் 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பில் 154 ரன்களை மட்டுமே பெற்றனர். இதனால், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் 4வது பதிவு செய்துள்ளது. மேலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 4-1 புள்ளிகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!