TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு.. மிக்ஜாம் புயல் எதிரொலி – அரசு அறிவிப்பு!

0
TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு.. மிக்ஜாம் புயல் எதிரொலி - அரசு அறிவிப்பு!
TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு.. மிக்ஜாம் புயல் எதிரொலி - அரசு அறிவிப்பு!
TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு.. மிக்ஜாம் புயல் எதிரொலி – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் டிச. 4,6 ஆம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு வானிலை மாற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே சமயம் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இருக்கிறது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

TN TET அறிவிப்பு 2023 – தேர்வு தேதி, தகுதி என முழு விவரங்களுடன்…!

இந்த புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்த இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்இ அலுவலரும், செயலாளருமான அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு டிச. 4 மற்றும் டிச. 6 நடைபெற இருந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த தேதியில் தேர்வர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!