இந்தியாவில் செப்டம்பர் மாத பள்ளி விடுமுறை நாட்கள் – மாணவர்கள் கவனத்திற்கு!
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. அந்த வகையில் பண்டிகை தினங்கள் எந்த தேதியில் வரும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விடுமுறை நாட்கள்:
இந்தியாவில் மக்கள் பலர் கொண்டாடும் முக்கியமான பண்டிகை நாட்கள் செப்டம்பர் மாதம் வருகிறது. அதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் G-20 உச்சி மாநாடு, ஜன்மாஷ்டமி, கணேஷ் சதுர்த்தி மற்றும் ஈத்-இ-மிலாத் போன்ற பண்டிகைகள் வரிசையாக வருகிறது. அதாவது செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அல்லது செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி ஜென்மாஷ்டமி பண்டிகை வருகிறது .
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் துவக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுவதால் விடுமுறை விடப்பட்டது. செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும். செப்டம்பர் 28 ஆம் தேதி ஈத்-இ-மிலாத் பண்டிகை காரணமாக விடுமுறை ஆகும். இந்த மாதம் பொது அல்லது தேசிய விடுமுறைகள் இல்லை. இருந்தாலும் ஏராளமான பண்டிகை நாட்கள் வருவதால் பல விடுமுறை நாட்கள் வருகிறது.