உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா..! ரஷ்யாவுக்கு எதிராக மாறுமா..?
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த இரண்டரை வருடங்களாக போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், அங்குள்ள பொதுமக்கள் பாதிப்படைந்து தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமல் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகின . மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பயணத்தை மேற்கொண்டார்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. பொதுமக்களுக்கு இலவசமா?? அமைச்சர் உதயநிதி தகவல்!!
மேலும் , போலந்தில் அவரின் பயணத்தை முடித்துவிட்டு “Force one train” மூலம் உக்ரைன் சென்றடைந்த இந்திய பிரதமர், உக்ரைன் மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு ” மருத்துவ நிவாரண வசதி பொருட்களை “உக்ரைன் அரசிடம் ஒப்படைத்துள்ளார். பின்பு, உக்ரைன் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



























