இந்தியாவில் முட்டை விலை நிலவரம் என்ன? – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் முட்டை விலை நிலவரம் பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முட்டை விலை
தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. இங்கு சுமார் 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதில் முட்டை விலை 490 காசுகள் விற்ற நிலையில், 5 காசு உயர்த்தி 495 காசாக நிர்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
PAN கார்டு, PRAN கார்டு என்றால் என்ன? – இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்!!
அதே நாடு முழுவதும் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் சென்னையில் 540 காசுகள், ஐதராபாத் 500 காசுகள், விஜயவாடா 526 காசுகள், பர்வாலா 514காசுகள், மும்பை 560 காசுகள், மைசூரு 537 காசுகள், பெங்களூரு 535காசுகள், கோல்கட்டா 595காசுகள், டில்லி 525 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல முட்டைக்கோழி கிலோ 106 ரூபாய்கும், கறிக்கோழி கிலோ 113 ரூபாய்க்கும் பழைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.