இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா – கண்ணீர்மயமான மைதானம்!!
உலகக்கோப்பை இறுதி போட்டியில் யாருமே எதிர்பாராத வண்ணம் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
உலகக்கோப்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிகொண்டனர். இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியினர் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால், முதலில் களமிறங்கிய இந்திய அணியினர் 50வது ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை மட்டுமே பெற்றனர். பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆனதால் இந்தியா வெற்றி பெறுமா என்கிற அச்சம் ஆரம்பித்திலேயே வந்துவிட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு எப்போது? வெளியான சூப்பர் அறிவிப்பு!!
அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியினர் 43 ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்து 6வது முறையாக உலகக்கோப்பை வென்றுள்ளனர். அனைத்து லீக் போட்டிகளிலும் வென்று மாஸ் காட்டிய இந்திய அணி கடைசியில் அவுட் ஆனதால் அனைத்து வீரர்களும் கண்ணீர் மல்க மைதானத்தில் இருந்து வெளியேறினர். இருப்பினும் ரசிகர்கள் இந்த பயணம் தொடரட்டும் என வீரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.