ஆசிய கோப்பை 2023: 8வது முறையாக இந்தியா சாம்பியன்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!
16வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் 6.1 ஓவரிலேயே இந்தியா இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசியக்கோப்பை
16வது ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் நேற்று இந்திய அணியினர் மற்றும் இலங்கை அணியினர் மோதிக்கொண்டனர். மழை காரணமாக கிரிக்கெட் போட்டி தாமதமாக துவங்கப்பட்ட நிலையிலும் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணியினர் போட்டியை துவங்கினர்.
ஆனால், இலங்கை அணியினர் எதிர்பாராத நிலையில் வெறும் 15.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களிலேயே ஆட்டத்தை முடித்தனர். அதாவது, சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் பெற்றனர். இதன் பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியினர் 6.1 ஓவரிலேயே எந்தவித விக்கெட்களையும் பெறாமல் இந்தியா 51 ரன்கள் பெற்று அபார பெற்றி பெற்றது.
Follow our Twitter Page for More Latest News Updates
அதாவது, இந்திய அணியை சேர்ந்த கிஷான் 23 ரன்களும்சு, ப்மன் கில் 27 ரன்களும் பெற்று அபார வெற்றி பெற்றனர். இத்துடன் இந்தியா 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.