2023ம் ஆண்டு கிரிக்கெட்டை ஆண்ட இந்திய அணி? 10 ஆண்டுகளாக நிறைவேறாத கனவு!!

0
2023ம் ஆண்டு கிரிக்கெட்டை ஆண்ட இந்திய அணி
2023ம் ஆண்டு கிரிக்கெட்டை ஆண்ட இந்திய அணி
2023ம் ஆண்டு கிரிக்கெட்டை ஆண்ட இந்திய அணி? 10 ஆண்டுகளாக நிறைவேறாத கனவு!!

நடப்பு 2023ம் ஆண்டு இன்னும் வாரத்தில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை ஒருமுறை பின்னோக்கி பார்க்கலாம்.

இந்திய அணி இந்த வருடத்தில் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. அதில் 3 வெற்றி, 2 தோல்வி மற்றும் 2 டிரா செய்துள்ளது. அதனை தொடர்ந்து விளையாடிய 35 ஒருநாள் போட்டிகளில் 27 வெற்றி, 7 தோல்வி மற்றும் 1 முடிவில்லை என்று அசத்தியுள்ளது. கடந்த உலகக் கோப்பை தொடரில் வரிசையாக 10 வெற்றிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சாதனை துளிகள்:
  • அதனை போல 23 டி20 சர்வதேச போட்டிகளில், 15 வெற்றிகளை வாரிக் குவித்துள்ளது. இப்படி எல்லா பக்கமும் வெற்றி சதவீதத்தை அதிகமாக பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் தான் மேலோங்கி உள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.26) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – வெளியான தகவல்!!
  • இந்தியா இந்த ஆண்டு ODI போட்டிகளில் 350+ ரன்களை 9 முறை கடந்துள்ளது. ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு அணி இந்த மைல்கல்லை இதுவரை தொட்டது இல்லை. இதற்கு முன்னர், கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 7 முறை 350+ ரன்களை எடுத்துள்ளது. இது புதிய உலக சாதனை ஆகும்.
  • இந்தாண்டு இந்திய அணி மட்டும் 250 சிக்ஸர்களை விளாசி உள்ளது. இதன் மூலம் சிக்ஸர்கள் பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளது.
  • இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 35 ஒருநாள் போட்டிகளில் (23.34 சராசரி & 5.1 என்ற பொருளாதார வீதம்) 289 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். குறைந்த போட்டிகளில் இவ்வளவு விக்கெட் வீழ்த்துவது இது முதல் முறை.
10 ஆண்டுகளாக நிறைவேறாத கனவு:

இந்திய அணி இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை என இரண்டு ICC தொடரிலும் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றியது. இதன் மூலம் ICC கோப்பை வெல்லும் கனவு 10வது ஆண்டாக தொடர்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!