தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரேஷன் பொருட்கள் விநியோகம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரேஷன் பொருட்கள் விநியோகம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரேஷன் பொருட்கள் விநியோகம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரேஷன் பொருட்கள் விநியோகம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று பரவிய செய்திக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

ரேஷன் பொருட்கள்:

தமிழகத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடையும் விதமாக செயல்பட்டு வருவது ரேஷன் கடைகளில் பொது விநியோகத்தின் கீழ் அரிசி மற்றும் மானிய விலையில் மற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருவது தான். இத்தகைய ரேஷன் கடைகளில் அரசு ஊழியர்கள், அதிக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் என்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இதுவரையில் மானிய பொருட்கள் வழங்கப்பட்டு தான் வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களாகவே அரசு ஊழியர்கள், அதிக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது – பட்டியல் வெளியீடு!

இதனை பார்த்த அரசு ஊழியர்கள், அதிக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் இது முற்றிலும் வதந்தி என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தகைய நிபந்தனைகள் நகை கடன் தள்ளுபடிக்கு விதிக்கப்பட்டது மட்டுமே. அதனால் அத்தகைய நகைக்கடன் தள்ளுபடி நிபந்தனைகளை தொடர்ந்து இத்தகைய வதந்தி பரவி வருவதால் மக்கள் தவறாக புரிந்து கொண்டு செயல்படுவதாக தெரிகிறது. இதனை புரிந்து கொள்ளாத அரசு ஊழியர்கள், அதிக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஆகியோருக்கு உண்மையை உணர்த்தும் வகையில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டுரைப் போட்டி!

மேலும், தற்போது அரிசி பெற்று வரும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் பயன் பெறலாம். அதாவது தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை அடையலாம் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான வதந்திகள் என்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here