தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது – பட்டியல் வெளியீடு!

0
தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது - பட்டியல் வெளியீடு!
தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது - பட்டியல் வெளியீடு!
தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது – பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி அரசு வரும் 2022ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், காந்தி ஜெயந்தி மற்றும் தொழிலாளர் தினங்களை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை பட்டியல்:

வருடம் தோறும் ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியலை முன்னதாகவே வெளியிடும். அதன்படி, புதுச்சேரி அரசு தற்போது அடுத்து வரும் 2022ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் மே 1ம் தேதியான தொழிலாளர் தினம் மற்றும், அக்டோபர் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டுரைப் போட்டி!

தொழிலாளர் தினத்தில் அரசு விடுமுறை அளிக்காதது தொடர்பாக பல புகார்கள் எழுந்துள்ளது. அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதற்கு இது உதாரணமாக அமைந்துள்ளது என்று தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ!

தொழிலார் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி இரண்டு தினங்களும் ஞாயிற்று கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை தினங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் செயலர் கிரண் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவு துணைநிலை ஆளுநரின் உத்தரவின்படியே வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முக்கிய இரண்டு தினங்களும் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளை போல் வரும் 2022ம் ஆண்டிலும் தொழிலாளர் தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!