சட்டமன்ற அதிரடி: “தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும்” – NEP கொள்கைக்கு ஆளுநர் உரையில் நேரடி மறுப்பு!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18, 2026) காலை 10 மணிக்குத்தொடங்கியது இக்கூட்டத்தொடரில் மரபுவழியாக உரை நிகழ்த்திய தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மாநிலத்தின் மிக முக்கியமான கல்விக் கொள்கை முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இருமொழிக் கொள்கையில் உறுதியான முடிவு
(Two-Language System)
சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், “தமிழ் மற்றும் ஆங்கிலம்” ஆகிய மொழிகளை மட்டுமே கற்பிக்கும் தற்போதைய இருமொழிக் கொள்கையைத் (Two-Language Policy) தமிழக அரசு தொடர்ந்து மிக உறுதியோடு பின்பற்றும் என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை மாநில அரசு ஏற்காது என்பதை இந்த உரை மீண்டும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP 2020) கடும் எதிர்ப்பு!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை (NEP) மாநில அரசு முழுமையாக எதிர்க்கிறது என்று ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ‘சமக்ர சிக்ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) திட்டத்தின் ₹3,458 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு மீது ஆளுநர் உரையில் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக இந்த நிதியை எவ்வித நிபந்தனையுமின்றி ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக நீதி கணக்கெடுப்பு (Social Justice Survey)
கல்வி மட்டுமின்றி சமூக நீதியை நிலைநாட்டும் மற்றொரு முக்கிய அறிவிப்பாக, மத்திய அரசு தனது மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பை முடித்தவுடன், அதற்கு இணையாகத் தமிழகத்தில் மாநில அரசு சார்பில் ஒரு விரிவான “சமூக நீதி கணக்கெடுப்பு” (Social Justice Survey) நடத்தப்படும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.
போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (TNPSC Current Affairs Points):
- சட்டமன்ற கூட்டத்தொடர்:
17-வது தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நாள்
ஜூன் 18, 2026. - மாநில கல்விக் கொள்கை நிலைப்பாடு:
இருமொழிக் கொள்கை (தமிழ் & ஆங்கிலம்). - நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய கல்வி நிதி:
‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் ₹3,458 கோடி.


























