இனி இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்…!! தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், சில மக்கள் இந்த பொருட்களை நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்குவதில் சிரமம் நிலவில் வருகிறது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் போது, அவர்கள் பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, இந்த சிரமத்தை தீர்க்கும் விதமாக தமிழக அரசு “இல்லம் தேடி ரேஷன்” என்கிற திட்டத்தை தொடங்கியது. இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அடிக்கடி ரயில் பிரயாணம் செய்பவரா நீங்கள்..?? டிக்கெட் முன்பதிவு விதிகளில் ஏற்பட்டவுள்ள முக்கிய மாற்றம்..!!
அதாவது, இந்த திட்டம் முதன் முதலாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள வெள்ளக்கவி என்னும் கிராமத்தில் தொடங்கப்பட்டது. தற்போது, இத்திட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள சின்னூர், பெரியூர் மலைக்கிராமங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் அனைத்து மலைக்கிராமங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























