தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

0
??????????? ????? ????? 7 ??????????? ?????.. ?????? ????? ????? ????????? ??????? ?????..!!
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதைபோல் தென்னிந்திய வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக “இன்று (29-04-2025) முதல் மே 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, வருகின்ற மே 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இதனால் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!