
2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலகக் கோப்பை அட்டவணை – தேதி வெளியீடு! உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 2023ம் ஆண்டிற்கான ஐசிசி உலகக் கோப்பை அட்டவணை வெளியிடும் தேதி வெளியாகி இருக்கிறது.
ஐசிசி உலகக் கோப்பை
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கும் தேதி குறித்து எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக இந்தியா சொந்தமாக போட்டியை நடத்த இருக்கிறது. முன்னதாக இந்தியா இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து போட்டியை நடத்தியது. ஆனால் இந்த ஆண்டு முழு போட்டியையும் இந்தியா சொந்தமாக நடத்துகிறது.
கர்ப்பமாக இருக்கும் காவ்யா.. ஜீவா மேல் சந்தேகப்படும் ப்ரியா – வெளியான ப்ரோமோ!
இந்நிலையில் ஐசிசி உலகக் கோப்பை போட்டி 2023 அட்டவணை வெளியாகும் தேதி வெளியிடப்பட்டுள்ளது . அதன் படி இந்த போட்டிகளுக்கான அட்டவணை ஜூன் 27ம் தேதி காலை 11.30 மணிக்கு மும்பையில் st. ரெஜிஸ், lower parel மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஐசிசி உலகக் கோப்பை குறித்த முதல் அப்டேட் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.