ICC T20 ரேங்கிங் – நம்பர் 1 இடத்தில் பாபர் ஆசாம், 4 இடங்கள் பின்தங்கிய விராட் கோஹ்லி!

0
ICC T20 ரேங்கிங் - நம்பர் 1 இடத்தில் பாபர் ஆசாம், 4 இடங்கள் பின்தங்கிய விராட் கோஹ்லி!
ICC T20 ரேங்கிங் - நம்பர் 1 இடத்தில் பாபர் ஆசாம், 4 இடங்கள் பின்தங்கிய விராட் கோஹ்லி!
ICC T20 ரேங்கிங் – நம்பர் 1 இடத்தில் பாபர் ஆசாம், 4 இடங்கள் பின்தங்கிய விராட் கோஹ்லி!

ICC T20 ரேங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தில் பாபர் ஆசாம் உள்ளார். அதேபோல் விராட் கோஹ்லி 4 இடங்கள் பின் தங்கியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐசிசி டி 20 ரேங்கிங்:

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. தற்போது டி20 கிரிக்கெட் ரேங்கிங் பட்டியலில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மூன்று இன்னிங்ஸ் விளையாடி வெறும் 68 ரன்கள் எடுத்ததால் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில் 4 இடம் பின்தங்கி 8-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி செலுத்தா விட்டால் சிலிண்டர், ரேஷன் கிடையாது – ஷாக் அறிவிப்பு!

அதேபோல் கே.எல்.ராகுல் 5 இன்னிங்ஸில் 194 ரன்களை குவித்துள்ளார். இதனால் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடம் பிடித்துள்ளார். அதே போல இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ரோகித், 174 ரன்கள் எடுத்ததால் டி20 ரேங்கிங் பட்டியலில் 15-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஷா பட்டியலில் முதல் மூன்று இடங்களை இலங்கையின் வனிந்து ஹசரங்கா, தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, இங்கிலாந்தின் அடில் ரஷீத் ஆகியோர் பிடித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை புஷ்பயாகம்!

பட்டியலின்படி ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி, வங்கதேச அணியின் ஷகிப்-அல்-ஹசன், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் என ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 4 இடம் பின்தங்கி 8-வது இடம் பிடித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!