மக்களே GPAY-ல எப்படி சுலபமா கடன் வாங்கலாம்னு தெரியுமா..?? அப்போ உடனே இதை தெரிஞ்சிக்கோங்க..!

0
மக்களே GPAY-ல எப்படி சுலபமா கடன் வாங்கலாம்னு தெரியுமா..?? அப்போ உடனே இதை தெரிஞ்சிக்கோங்க..!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய அதிகமாக GOOGLE PAY-வை பயன்படுத்துகின்றனர். அத்தகைய, GOOGLE PAY-வில் பணப்பரிவர்த்தனை மட்டும் தான் செய்ய முடியும் என்று நம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் 1 லட்சம் வரை கடன் வாங்கலாம் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?? வாங்க அது எப்படின்னு பார்க்கலாம்.

அதாவது, GOOGLE PAY பயனர்களுக்காக GOOGLE INDIA ஒரு புதிய கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இத்தகைய வசதி அடிக்கடி கூகுள் PAY பயன்படுத்தும் பயனர்களுக்கு மிக விரைவாக கடன் பெற வழிவகை செய்யும்.

* உங்கள் மொபைலில் ” google pay ” செயலிக்கு சென்று அதில் பிசினஸ் அல்லது payment tab கீழ் இருக்கும் லோன் செக்சனை கிளிக் செய்யவும். நீங்கள் தகுதி பெற்றவர் என்றால், உங்கள் பரிவர்த்தனையின் முழு விவரம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் கொடுக்கப்பட்டு இருக்கும்.

குரூப் 4 தேர்வுகள் முடிவு எப்போது..? TNPSC ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

* பிறகு, அதில் தொகை, வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் உள்ளிட்ட கடன் விவரங்களை சரிபார்த்து அதற்கு ஒப்புக் கொண்டால், கடன் விண்ணப்பத்தை தொடங்க இணைப்பை கிளிக் செய்து அதில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்கள், வங்கி கணக்கு எண், IFSC குறியீடு போன்ற விவரங்களை வழங்கவும்.

* அதன் பின், திருப்பி செலுத்துவதற்கு ஏற்ற EMI திட்டத்தை தேர்ந்தெடுத்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று, நீங்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP எண்ணை சேர்க்கவும்.

* கடைசியாக உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், GST மற்றும் PROSESSING கட்டணம் இருந்தால் அதை கழித்துவிட்டு, கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!