குரூப் 4 தேர்வுகள் முடிவு எப்போது..? TNPSC ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை போட்டி தேர்வுகள் மூலம் கண்டறிந்து பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், VAO போன்ற 8,932 பணிகளுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 தேதி நடைபெற்றது. இதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார். தற்போது, இதன் தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வரும் 28ம் தேதி நடைபெறும் TNPSC கூட்டத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என TNPSC ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அக்கூட்டத்திற்கு பிறகு ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC குரூப் 4 2025 எழுத போறீங்களா? சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!
























