ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பது எப்படி? உடனே தெரிஞ்சுக்கோங்க!
மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாகும். ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரியை ஆன்லைன் மூலம் மாற்றலாம்.
மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – ஆண்டுக்கு இருமுறை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டம்!
தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் துறைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tnpds.gov.in/ க்குச் செல்லவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும். ஒருவேளை கடவுச்சொல் மறந்து போயிருந்தால், அதை மீட்டெடுக்கும் வசதியும் உள்ளது. வலைத்தளத்தில் உள்ள மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்” என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் உறுப்பினரை சேர்க்க என்பதைக் கிளிக் செய்யவும். புதிய உறுப்பினர் பெயர், பாலினம், பிறந்த தேதி, குடும்பத் தலைவருடனான உறவு, ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிட்டு உறுப்பினரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.


























