தமிழகத்தில் தீவிரமடையும் கனமழை – 18 பேரிடர் மீட்புக் குழு தயார்!!
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலு பெற இருப்பதால் நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலக கணக்கு திட்டங்களில் புதிய திருத்தம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!!!
இதனால், கூடுதல் மழைபொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 18 பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாவும், ஒவ்வொரு குழுவிற்கும் 30 பேரிடர் மீட்பு வீரர்கள் வீதம் 540 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.