தபால் அலுவலக கணக்கு திட்டங்களில் புதிய திருத்தம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!!!
தபால் அலுவலக திட்டத்தில் ஒன்றான தேசிய சேமிப்பு நேர வைப்பு திட்டத்தில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தபால் அலுவலக திட்டம்:
வங்கிகளை காட்டிலும் தபால் அலுவலக கணக்கு திட்டங்களில் கூடுதல் லாபம் கிடைப்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தற்போது தேசிய சேமிப்பு நேர வைப்பு திட்டத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, புதிய விதிமுறையின் படி 5வருட போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இணைந்து 4 வருடத்திற்கு முன்பாகவே முதலீடு செய்த தொகையை பெற விரும்பினால் அதற்கான வட்டி விகிதத்துடன் முதலீடு செய்த தொகையும் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC AE தேர்வுக்கு ஜாக்பாட் வாய்ப்பு – ஈஸியா ஆகலாம்.. முழு விவரம் இதோ!
ஆனால், 2 அல்லது 3 வருட போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் இணைந்து 1 வருடத்திலேயே முதலீடு செய்த தொகையை பெற விரும்பினால் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய வட்டி விகிதத்தில் 2% குறைவான வட்டி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, கணக்கு துவங்கி 6 மாதத்திற்குள் முதலீடு செய்த பணத்தை முதலீட்டாளர்கள் திரும்ப பெற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.