புதிய ஆதார் அட்டை .. இன்று முதல் பதிவு – அமைச்சர் முக்கிய தகவல்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிதாக ஆதார் அட்டை பதிவு செய்ய விரும்புவர்களுக்கு சிறப்பு தகவல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆதார்:
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை முக்கிய அடையாள ஆவணமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆதார் பெறாதவர்கள் புதிதாக ஆதார் பெற விரும்பினால் இதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். தற்போது கர்நாடகம் மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் மத விவகாரங்கள் துறை அமைச்சர் ஆர் ராமலிங்கம் ரெட்டி புதிய ஆதார் கார்டுகளை பதிவு செய்வதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தபால் அலுவலக கணக்கு திட்டங்களில் புதிய திருத்தம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!!!
அதன்படி பிடிஎம். லே-அவுட் தொகுதியில் நடப்பு நவம்பர் 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கோரமங்கலம் ஐந்தாவது பிளாக்கில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே உள்ள ஆதார் அட்டை முகவரியில் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் அல்லது வேறு ஏதேனும் மாற்றம் செய்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.