தமிழகத்தில் நாளை முதல் கனமழை – பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு!!

0
தமிழகத்தில் நாளை முதல் கனமழை - பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு!!
தமிழகத்தில் நாளை முதல் கனமழை - பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு!!
தமிழகத்தில் நாளை முதல் கனமழை – பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு!!

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2000 மழைக்கால சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட இருக்கிறது.

மழைக்கால சிறப்பு முகாம்:

அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நாளை முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி நாளை முதல் தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக சுகராதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தற்போது இல்லை? – அரசு தரப்பு விளக்கம்!

மேலும், இந்த முகாம்கள் அனைத்தும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாம்களில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் அனைத்தும் வழங்கப்படும். மேலும், கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!