அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தற்போது இல்லை? – அரசு தரப்பு விளக்கம்!

0
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தற்போது இல்லை? - அரசு தரப்பு விளக்கம்!
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தற்போது இல்லை? - அரசு தரப்பு விளக்கம்!
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தற்போது இல்லை? – அரசு தரப்பு விளக்கம்!

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய குழு அமைப்பது தொடர்பான செய்திகள் சமீபத்தில் அதிக அளவு வெளியாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதிய ஊதிய குழு:

தற்போது நாட்டின் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதிய குழு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கான ஊதிய பரிந்துரையை செய்யும் ஊதிய குழு அமைப்புகள் 10 ஆண்டுகள் மட்டுமே செயல்படக்கூடியவை. 10 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய ஊதிய குழு அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும். புதிய ஊதிய குழு அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படும். அந்த வகையில் ஏழாவது ஊதிய குழு 2025 ஆம் ஆண்டுடன் நிறைவு பெற உள்ளதாகவும், 2026ல் புதிய எட்டாவது ஊதிய குழு செயல்பாட்டிற்கு வரும் என்றும், இதற்கான அறிவிப்புகள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று செய்திகளில் தகவல்கள் வெளியாகி வண்ணம் இருந்து வருகிறது.

தமிழக முதல்வர் காப்பீடு திட்டத்தில் இணைய அரிய வாய்ப்பு – நாளை (டிச.02) சிறப்பு முகாம்!

இது தொடர்பாக மத்திய அரசின் நிதி செயலாளர் டி.வி சோமநாதன் அவர்கள் நேற்று, 5.4 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமைப்பது தொடர்பான திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கான ஆலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!