கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் காலமானார்.. வாடிகன் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், மார்ச் 2013 ஆம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டின் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ என்பவர் போப் பிரான்சிஸாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கடந்த சில மாதங்களாக இவர் நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் “88 வயதான போப் பிரான்சிஸ் இன்று (21-04-2025) காலை காலமானார்”.
தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!
மேலும், போப் பிரான்சிஸ் மறைவு குறித்து பேசிய வாடிகன் கமெர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல், “அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது,” என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வு பற்றி அறிந்த உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



























