பிக் பாஸ் சீசன் 6-இல் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் இவர் தான் – அதிரவைக்கும் கருத்து கணிப்பு முடிவு!
Ormax நிறுவனம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மக்களின் மனதை கவர்ந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஜிபி முத்து முதலிடத்தில் உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6:
விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பட்டு வந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் வெற்றியால் தற்போது வரை ஐந்து சீசன்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு விட்டது. இதன் ஆறாவது சீசன் சில நாட்களுக்கு முன்பாக கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் டிக் டாக் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஜி பி முத்து பங்கேற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
வழக்கம் போல பிக்பாஸ் தொடங்கியதும் இணையம் முழுவதும் பிக்பாஸ் ஆதரவாளர்கள் போட்டியாளர்களுக்கு Army-யை தொடங்கிவிட்டனர். 20 போட்டியாளர்களை இந்த சீசன் கொண்டுள்ளதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீசன் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் 6ல் அதிகம் பிரபலமாக இருக்கும் போட்டியாளர் யார் என்பது ormax நிறுவனம் ஒரு கருத்துகணிப்பை நடத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த கணக்கெடுப்பின்படி மக்களின் அதிகமான ஆதரவோடு ஜிபி முத்து முதலிடத்தை பிடித்துள்ளார். இது அனைவரும் கணிதத்தே. அதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ரச்சிதா மஹாலக்ஷ்மி, மூன்றாம் இடத்தில் ஆயிஷா, நான்காம் இடத்தில் ஜனனி மற்றும் ஐந்தாம் இடத்தில் அமுதவாணன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்