வங்கியில் கடன் வாங்கி இருக்கீங்களா? வட்டிகள் உயர்வு!

0

வங்கியில் கடன் வாங்கி இருக்கீங்களா? வட்டிகள் உயர்வு!

வங்கிகள் ஆனது பொது மக்களின் தேவையை பொறுத்து கல்வி கடன், வீட்டு கடன், தனி நபர் கடன் போன்ற பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் பலரது கனவுகள் நிறைவடைந்து வருகிறது. தற்போது பல வங்கிகளின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. SBI வங்கியில் எம்சிஎல்ஆர்-அடிப்படையிலான விகிதங்கள் 8.20% முதல் 9.1% வரை உயர்த்தப்பட்டுள்ளது.பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 3 மாத காலத்தைத் தவிர எந்த கடன் விகிதத்தையும் வங்கி மாற்றியமைக்கவில்லை. ஒரே இரவு விகிதத்தை வங்கி 9.10% ஆகவும் ஒரு மாதத்திற்கு 9.15% ஆகவும் மாற்றியுள்ளது.

முதலீடு செய்ய போறீங்களா? ஒரு நாளைக்கு ரூ.171 முதலீடு ரூ.28 லட்சம் வருமானம் கிடைக்கும்!

PNB வங்கி சில தவணைகளில் கடன் விகிதங்களை 5 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. பிஎன்பி இணையதளத்தின்படி, ஒரே இரவு விகிதம் இப்போது 8.30% ஆகவும், ஒரு மாதத்திற்கான எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன் விகிதம் 8.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஐடிபிஐ வங்கியின் இணையதளத்தின்படி, ஒரே இரவு தவணைக்கான சமீபத்திய எம்சிஎல்ஆர் 8.40% ஆகும். ஒரு மாத காலத்திற்கு, எம்சிஎல்ஆர் 8.55% ஆகும். ஐடிபிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத எம்சிஎல்ஆர் விகிதம் 8.85% ஆகவும், ஆறு மாத எம்சிஎல்ஆர் 9.10% ஆகவும் உயர்த்தி உள்ளது. கனரா வங்கி அனைத்து தவணைகளையும் 5 bps அதிகரித்துள்ளது. இரவு நேர விகிதம் இப்போது 8.25% ஆக உள்ளது. ஒரு மாத விகிதம் 8.35% ஆகவும், மூன்று மாத விகிதம் 8.45% ஆகவும் உயர்த்தியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!