மாணவர்களுக்கு ஜாலி…அரையாண்டு விடுமுறை அறிவிச்சாச்சு..!! ” எவ்வளவு நாட்கள் தெரியுமா”..??
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்விசார் திறனை உறுதி செய்யும் நோக்கில் ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25 ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணை வெளியானதை தொடர்ந்து, தற்போது அரையாண்டு விடுமுறை குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு 10, 12-ம் வகுப்பு 2024-25 அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு…” முழு தகவலுடன் உள்ளே”..!!
அதாவது, டிசம்பர் 24ம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு, பின் 10 நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.



























