ஏப்ரல் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று வரை சற்று குறைந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை:
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.54,000-க்கு விற்கப்படுகிறது.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. கைநிறைய ஊதியம்!
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 7220க்கும் ஒரு சவரன் 57,760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.0.50 குறைந்து 87.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.87,000-க்கு விற்பனையாகிறது.