சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 குறைந்த நிலையில் இன்றும் ரூ.160 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை

இந்தியாவில் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதியின் காரணமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 50,000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் நகை பிரியர்கள் நகை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்ததால் தாய்மார்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.

தமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் மாணவர்கள்!

அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 49 ரூபாய் குறைந்து 6092 ரூபாய்க்கும், சவரனுக்கு 392 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்திருக்கிறது. அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6,072 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 76.50 விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 காசுகள் குறைந்து 76.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!