
நகை பிரியர்களுக்கு கவனத்திற்கு.. சரிவை சந்தித்த தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??
உலக நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள போர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு முறை போன்ற காரணங்களால் உலகப் பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. எனவே கடந்த சில மாதங்களாக தங்கம் விலை அதிகரித்தது. இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலையால், சாமானிய மக்கள் நகையை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
HAL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
இந்நிலையில், “தமிழகத்தில் நேற்று (14-04-2025) தங்கம் விலை ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.70,040 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (15-04-2025) சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ. 69,760 ஆகவும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.110 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது”.

























