ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு.. போக்குவரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழக அரசு பொது மக்களின் நலன் தமிழகம் முழுவதும் மலிவு விலையில் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் முயற்சியாக அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
நகை பிரியர்களுக்கு கவனத்திற்கு.. சரிவை சந்தித்த தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??
அதாவது, “கோடை காலத்தில் ஏராளமானோர் வெளியூருக்கு பயணிப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதற்கட்டமாக 20 தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து மே மாதம் முதல் வாரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவிருக்கும் நிலையில், இதற்கான டெண்டர் தற்போது விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.


























