HAL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Dresser பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Dresser பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- சம்பளம்!
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























