
Today Gold Rate: மீண்டும் வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை.. தமிழகத்தில் இன்றைய எவ்வளவு தெரியுமா..??
சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மையால் இந்தியாவில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதனால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (20-05-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (17-05-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராமிற்கு ரூ. 8,720 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 69,760 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று விடுமுறை நாள் என்பதால் எவ்வித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (19-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 109-க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Join the ExamsDaily Whatsapp Group

























