
Today Gold Rate: குறைந்த வேகத்தில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு என்ன தெரியுமா..??
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதை தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலையானது வரலாறு காணாத புது உச்சத்தை தொட்டது. பொதுமக்கள் தற்போது போர் பதற்றம் முடிவடைந்த நிலையில் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் நேற்று (12-05-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.8750 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.70,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் “இன்று (13-05-2025) தங்கம் விலையானது கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8765-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ,1,09,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

























