பயணத்தின் போது டிக்கெட் கிழிந்துவிட்டதா..? அப்போ இதை செய்யுங்க.. இந்தியன் ரயில்வே அறிவித்த முக்கிய தகவல்..!!

0

இந்தியா முழுவதும் ரயில் போக்குவரத்து மூலம் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மேலும், எவ்வித இடையூரின்றி பயணம் செய்ய ரயில் டிக்கெட் அவசியம். இந்நிலையில் எடுத்த டிக்கெட் தவறுதலாக கிழிந்து விட்டால் அது செல்லுமா இல்லையா? என்ற கேள்வி பலருக்கு உண்டு. இதை தொடர்ந்து, சிலர் டிக்கெட் செல்லாது என்று எண்ணி வேறு டிக்கெட் எடுக்கின்றனர். இனி இப்படி செய்யத் தேவையில்லை, ஏனெனில் கிழிந்த டிக்கெட்டும் செல்லும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Today Gold Rate: குறைந்த வேகத்தில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு என்ன தெரியுமா..??

அதாவது, நீங்கள் வாங்கிய “டிக்கெட் தவறுதலாகக் கிழிந்துவிட்டால் அதில் டிக்கெட் எண், எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள், டிக்கெட் கட்டணம், அதிகாரப்பூர்வ சின்னம் சரியாகத் தெரிந்தால் அது செல்லும்” என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இவற்றில் ஏதாவது ஒன்று சரியாக இல்லை என்றாலும் டிக்கெட் செல்லாது எனவும், டிக்கெட் இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை தனிநபர் கட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க “நீங்கள் டிக்கெட் வாங்கியவுடன் மேலே குறிப்பிட்டுள்ள முக்கியத் தகவல்கள் தெரியும்படி புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது அல்லது உங்கள் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வது போன்ற வசதியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!